
மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பகாசுரன் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கி இயக்குனராக தடம் பதித்தவர் மோகன் ஜி.
இவரது இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் பகாசூரன். செல்வராகவன் நாட்டி நடராஜ் உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :
யூ ட்யூபில் கிரைம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் ரிட்டயர் ஆர்மி மேனான நட்டி நட்ராஜ். திடீரென அவரது சொந்த அண்ணன் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வீட்டில் எல்லோரும் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் கேசை முடிக்கிறது.

அதன் பிறகு நட்டி நடராஜுக்கு தன்னுடைய அண்ணன் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் திருமணம் செய்து கொண்டாலும் இந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என ஒருவர் போனில் மிரட்டிய விஷயமும் தெரிய வர அண்ணன் மகளை மிரட்டிய மர்ம கும்பலை தேடிச் செல்கிறார்.
மறுபக்கம் பீமராசுவாக நடித்துள்ள செல்வராகவன் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை தேடித்தேடி கொள்கிறார். வேறு வேறு கதையில் பயணிக்கும் நட்டி நட்ராஜ் மற்றும் செல்வராகவன் என இருவரும் ஒரு கட்டத்தில் சந்திக்கின்றனர். இதனால் அடுத்து நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
பீமராசுவான செல்வராகவனுக்கு ஒரு கண் கலங்க வைக்கும் பிளாஷ்பேக் இருக்கிறது. பாசமான அப்பாவாக, நாச வேலைகள் ஈடுபடும் கும்பலை கொள்ளும் கொடூர கோபக்காரனாக தன்னுடைய மாறுபட்ட நடிப்பை கொடுத்து மக்கள் மத்தியில் ஆணித்தனமாக இடம் பிடித்துள்ளார்.

நட்டி நடராஜ் தன்னுடைய கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பின் மூலம் பலம் சேர்த்துள்ளார். சாம் சி எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
இயக்குனர் மோகன் ஜி செல்போனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்து அழுத்தமாக இந்த படத்தில் பேசியுள்ளார். ஆனால் அதற்கான தீர்வுகளை சொல்ல மறந்து விட்டார்.

பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும் பாடல்கள் பலவீனமாகவே உள்ளன.