Modi vs Vaiko
Modi vs Vaiko

Modi vs Vaiko – தஞ்சை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடிக்கு, மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் என்று வைகோ கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது, ‘டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு 2 இடத்தில் அனுமதியளித்து வேளாண் மண்டலமான டெல்டாவை பெட்ரோலிய பொருளாதார மண்டலமாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

மீத்தேன் போன்ற திட்டங்களால் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் வரும் என்று கருதியே மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது.

இங்கு வாழும் மக்களை பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை’ என்று கூறினார்.

பிரதமர் மோடி குறித்து பேசுகையில், ‘உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி, தன் நாட்டில் இயற்கை சீற்றமான கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்தித்து ஒரு ஆறுதல் கூட சொல்ல வராமல் இருப்பது வேதனையளிக்கிறது.

மேலும், புயல் பாதிப்பை சீரமைக்கும் நோக்கில் தமிழக அரசு கேட்ட நிதியையும் கொடுக்கவில்லை.

தமிழகத்துக்கு தொடர்ந்து பிரதமர் மோடி துரோகம் விளைவித்து வருகிறார்.

இதன் காரணமாக, வரும் 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் போலீசார் கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கருப்பு பலூன் பறக்க விடப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் “நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் வாக்காளர்களுக்கு யார் லஞ்சபணம் கொடுத்தாலும், திமுகதான் ஆட்சி அமைக்கும்.

இதற்கு மதிமுக முழு ஒத்துழைப்பு கொடுத்து பணிபுரியும்” இவ்வாறு வைகோ கூறினார்.