மண்டேலா படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் தனது விருதுகளை யோகி பாபுவிற்கு அணிவித்து அழகு பார்த்திருக்கிறார். அந்த மகிழ்ச்சியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் கதாநாயகனாக நடித்திருந்த மண்டேலா திரைப்படம் கடந்த 2021ல் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.

இப்படம் மக்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு சிறந்த வசனம் மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதுகள் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள இயக்குனர் மடோன் அஸ்வின் யோகி பாபுவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் தனது விருதுகளை கொடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார். அந்த அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.