மும்பை மாடல் அழகியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரோட்டில் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை மாடல் அழகி மன்ஸி் தீட்சித், ராஜஸ்தான் கோட்டவை சேர்ந்தவர். இவர் மாடலிங் தொழில் செய்து கொண்டு, சிறிய அளவில் வணிக தொழிலும் செய்து வந்தார். இவரை யாரோ கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரோட்டில் வீசி இருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஐதராபாத் -ஐ சேர்ந்த முஸம்மில் சையத்(18) என்பவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ‘ முசம்மிலிற்க்கும், மான்சி தீட்சித்திற்கும் பழக்கம் இருந்துள்ளது.

சம்பவத்தன்று, முஸம்மில் மான்சியை தனது பிளாட்டிற்கு அழைத்துள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மான்ஸியை கொலை செய்துள்ளார். பிறகு மான்சியை பெரிய சூட்கேஸ் ஒன்றில் அடைத்து , ஓலா டாக்ஸி புக் செய்து டிரைவரிடம் விமான நிலையம் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் பாதியிலேயே ரிக்ஷாவில் செல்வதாக கூறி இறங்கி விட்டு அவர் சென்றபின் சூட்கேஸை வீசி விட்டு, ரிக்ஷாவில் வீட்டுக்கு சென்றுள்ளார் . பிறகு அதே வழியாக வந்த ஓலா டாக்ஸி டிரைவர் புதரில் சூட்கேஸ் இருப்பதை கண்டு போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், முஸம்மிலை கைது செய்தனர்.