MK Stalin vs TTV Dhinakaran
MK Stalin vs TTV Dhinakaran

MK Stalin vs TTV Dhinakaran – சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இருவருக்கும் இடையே தற்போது வலுவான பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.

திருவாரூர் இடைத்தேர்தலில் இருந்து தான் இந்த பஞ்சாயத்து ஆரம்பமானது.
திருவாரூர் இடைத்தேரலை அனைத்து தரப்பின் கருத்துக்களை கேட்ட பிறகு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது குறித்து தினகரன் கருத்துக் கூறுகையில், “திருவாரூரில் தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியை போலவே, எதிர்க் கட்சியான திமுகவும் பயப்படுகிறது” என்று தனது கருத்தை கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில், ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறுகையில், “திருவாரூர் கலைஞர் கருணாநிதியின் மண், திமுக எதற்குப் பயப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் தினகரன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் வேண்டுமானால் பயந்திருக்கலாம்” என்று அவர் குறித்து கருத்து தெரிவித்தார்.

மேலும் நேர்த்திக்கடன் போன்று வாரம்தோறும் பெங்களூரு சிறைக்கு தினகரன் செல்கிறார் என்று கடுமையாக தினகரன் மீது விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், நேற்றிரவு டிவிட் செய்த தினகரன் ” பல லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையையும், தாயையும் சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது” என்று ஸ்டாலினுக்கு பதிலடி தரும் வகையில் டிவிட் செய்திருந்தார்.

இருவரின் இந்த திடீர் விமர்சனங்களால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.