சீரியல் ஒளிபரப்பில் நடந்த குளறுபடியால் மன்னிப்பு கேட்டுள்ளது விஜய் டிவி.

Mistake in Eramana Rojave 2 Telecast : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இப்படி சின்னத்திரையில் மிக முக்கியமான சேனலாக விளங்கி வரும் விஜய் டிவி சீரியல் ஒளிபரப்பில் ஒரு பெரிய குளறுபடியை செய்துள்ளது. அதாவது ஈரமான ரோஜாவே சீரியல் முந்தைய நாள் எபிசோடையே நேற்று மீண்டும் ஒளிபரப்பு செய்துள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் கடுப்பாக இவ்வளவு பெரிய சேனலில் இப்படியா குளறுபடி செய்வீங்க என விமர்சனம் செய்ய தொடங்கினர். இதையடுத்து விஜய் டிவி தவறுக்கு மன்னிக்கவும், ஈரமான ரோஜாவே நேற்றைய எபிசோட் இன்று ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளது.