Mission Chapter 1 Movie Review
Mission Chapter 1 Movie Review

மிஷன் சாப்டர் ஒன் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் மிஷன் சாப்டர் ஒன். ‌ஜிவி பிரகாஷ் இசையமைக்க எமி ஜாக்சன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

படத்தின் கதைக்களம்:

லண்டனில், உளவாளியாக அருண் விஜய் தனது அடையாளத்தை மறைத்து ஒரு மிஷினாக செல்கிறார். ஆனால் அவரது வேலையில் சிக்கல் ஏற்பட லண்டன் போலீஸாரால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு அவர் ஒரு கலவரத்தை உருவாக்கி சிறையிலிருந்து தப்பித்து தனது மகளைப் பார்க்க வருகிறார், ஆனால் அருண் விஜயை இந்த ரகசிய பணிக்காக அனுப்பியவர் அருண் விஜய்யின் மகளை பிணை கைதியாக கொண்டு செல்கிறார், தன் மகளை காப்பாற்ற அருண் விஜய் அந்த வேலையை எப்படி செய்து முடிக்கிறார், என்பதே மிஷன்: சேப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே) திரைப்படத்தின் கதை.

YouTube video

படத்தை பற்றிய அலசல் :

அருண் விஜய் மிஷனாக மாஸாக நடிப்பை கொடுக்கிறார். மகளுக்காக துடிக்கும் அவரது பாசம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகள் தங்களது கதாபாத்திரத்தை அறிந்து நடித்து கொடுத்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இயக்குனர் ஏ.எல் பாசம் கலந்த அதிரடி ஆக்ஷன் திரில்லர் படத்தை கையில் எடுத்து திறம்பட இயக்கி உள்ளார்.

REVIEW OVERVIEW
மிஷன் சாப்டர் ஒன் திரை விமர்சனம்
mission-chapter-1-movie-reviewமொத்தத்தில் மிஷன் சாப்டர் ஒன் மிரள வைக்கும்.