Mirudhula Vijay Marriage Photos

சின்னத்திரை சீரியல் நடிகரை மணக்கிறார் நடிகை மிருதுளா விஜய்.

Mirudhula Vijay Marriage Photos : மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் வெளியான நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் மிருதுளா விஜய்.

மேலும் இவர் மலையாளத்தில் நடித்த செலபிரேஷன், பிரிட்டிஷ் பங்களா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த மிருதுளா விஜய் சின்னத்திரை சீரியல் நடிகரான யுவகிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சென்னையில் 51 மையங்களில் தடுப்பூசி போடும் பணி, மீண்டும் தொடங்கியது..

இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என கூறப்படுகிறது. கொரானா விதிமுறைகளை பின்பற்றி இருவருக்கும் மிக சிம்பிளாக உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MS Dhoni BirthDay | Rajinikanth Is Back | Amala Paul WebSeries Vishnuvardhan | Trending News | HD

ரசிகர்கள் பலரும் இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.