பிரபல நடிகையான மிருணாளினி ரவி தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் தான் மிருணாளினி ரவி. இவர் டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்ற வீடியோக்கள் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். இவரின் முதல் படம் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ தான் இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர் தொடர்ந்து சாம்பியன், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் ரசிகர்களிடம் பிரபலமானது விஷாலின் எனிமி படத்தில் வந்த “மனசோ இப்ப தந்தியடிக்குது” என்ற பாடல் மூலம் தான்.

அதன்பின் கடந்த ஆண்டு வெளியான விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் நடித்திருந்த இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி ரவி தற்போது புதிய கவர்ச்சிகரமான உடையில் போட்டோ ஷூட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.