பிரின்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நடிகை மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சுரேஷ் தயாரிக்க சாந்தி டாக்கீஸ் தயாரிக்க உள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மட்டும் டைட்டில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பிம்பிளிக்கி பிளாப்பி” என்கின்ற பாடலின் முழு வீடியோ செப்டம்பர் 1ஆம் தேதி இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இப்பாடலின் வீடியோ வெளியான ஒரே நாளில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் எஸ் கே வின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.