MGR Sathunavu Maiyam
MGR Sathunavu Maiyam

MGR Sathunavu Maiyam – சென்னை: “தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் சத்துணவு மையங்களை மூட வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது”.

அரசு பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

அதன் பிறகு முதல்வராக வந்த எம்.ஜி.ஆர். அவர்கள், அதை சத்துணவு திட்டமாக மாற்றியதுடன் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை நீடித்தார்!

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சத்துணவு திட்டத்தை பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தற்போது 43,200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது; இதன் மூலம் 50 லட்சம் ஏழை மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் ‘அமைப்பாளர், உதவியாளர் என 2 ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது’.

மாணவர்கள் வருகை குறைந்து வருவதன் காரணமாக அரசுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக வெளிவந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், தற்போது 25- க்கு குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு சத்துணவு திட்ட ஊழியர்கள் சங்க செயலாளர் ஆர்.நூர்ஜகான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கூறுகையில், “ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் 10,000 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது அரசு எடுத்துள்ள முடிவால் சத்துணவு திட்டம் மேலும் பலவீனம் அடையும்” என்றார்.

தமிழக அரசின் இந்த முடிவால், ஏழை எளிய மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.