MGR Memorial Day
MGR Memorial Day

MGR Memorial Day – சென்னை: எம்ஜிஆர் 31 – ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆரின் 31வது ஆண்டு நினைவு நாளான இன்று, எம்ஜிஆர் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழகம் முழுக்க அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை மெரினாவில் இன்று காலை எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

உடன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் மரியாதை செலுத்தினார்கள். மேலும் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு மாலை அணிவித்தனர்.

அதே போன்று, மக்கள் பலரும் திரளாக வந்து எம்ஜிஆர் நினைவிடத்திற்கு வந்தனர். மேலும் அதிமுக தொண்டர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனால் மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆர் நினைவிடத்தில் உறுதி மொழி ஒன்றை வாசித்தார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மக்கள் மற்றும் அதிமுகவினர் அந்த உறுதிமொழியை வாசித்தனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்த உறுதிமொழி: “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவை நினைவாக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும்!! நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைப்போம் !! ” போன்ற உறுதிமொழிகளை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here