
தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
மேலும் ரசிகர்கள் பலரும் இப்படத்தின் பாடல்கள் எப்படி இருக்கும் என பாடலாசிரியர் விவேக்கிடம் கேட்டுள்ளனர்.
இப்படத்திலும் ஆளப்போறான் தமிழன் என்பதை போல ஒரு மாஸான பாட்டு இருக்குமா? என கேள்வி எழுப்பி இருந்தனர்.
There Won’t b an Aalaporaan Thamizhan in Sarkar .. We didn’t work towards that too. This is a different film, different storyline with different needs. I tried to do justice. I will wait n c how far u like my work ???? https://t.co/xcup4z5nAl
— Vivek Lyricist (@Lyricist_Vivek) September 22, 2018
அதற்கு விவேக் சர்காரில் ஆளப்போறான் தமிழன் போல பாடல் இருக்காது, அது வேறு இது வேறு. இப்படத்தில் வேறு மாதிரியாக பணி புரிந்துள்ளோம்.
நானும் பாடல் வரிகள் பற்றிய விமர்சனங்களுக்காகா காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.