Mersal

Mersal Video : தளபதி விஜய் நடித்த மெர்சல் படக்குழு மீது புகார் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் மெர்சல். கடந்த வருடம் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

இப்படத்தில் விஜய்க்கு மேஜிக் சொல்லி கொடுத்திருந்தவர் ராமன் சர்மா. இவருக்கு இது நாள் வரை சம்பள பாக்கியை கொடுக்காமல் இன்று, நாளை என தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளது.

இதனால் தற்போது மேஜிக் கலைஞர் ராமர் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசும் போது அதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதானால் மெர்சல் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்த படமா? என்ற விவாதம் நெட்டிசன்களிடையே நடந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.