Mekedatu Dam Issues - CM Edappadi K Palaniswami
Mekedatu Dam Issues - CM Edappadi K Palaniswami

Mekedatu Dam Issues – CM Edappadi K Palaniswami – மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.

மேலும், ‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஒருமனதாக செயல்படுகிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்’ .

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் ‘காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ரூ. 5600 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது’.

மேலும் இதன் வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய நீர் வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

மத்திய நீர் வள ஆணையமும் மேகதாதுவில் ஆய்வு செய்யுமாறு கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது’.

இந்நிலையில் தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக நேற்று தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்தியது.

இதில் மேகதாதுவிற்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை தாக்கல் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்: “நீண்ட போராட்டத்திற்கு பின் தமிழகத்திற்கு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி நீர் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு இருக்கிறது.

இது தொடர்பான மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.மேலும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தமிழகத்திடம் அணைகட்ட அனுமதி வாங்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு அதையும் மீறி இருக்கிறது.

இதற்கு எதிராக நாம் இப்போது தீர்மானம் நிறைவேற்றுகிறோம். இந்த தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.

மேலும், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியதை தமிழக அரசு கண்டிக்கிறது. மத்திய அரசு ஒருமனதாக செயல்படுகிறது! மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும்.

மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. இந்நிலையில் கர்நாடக அரசோ இல்லை அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ தமிழக அரசின் அனுமதி இன்றி காவிரியில் எந்த கட்டுமானமும் செய்ய கூடாது.

மேலும் மத்திய அரசு இதை தடுக்க வேண்டும் “. இவ்வாறு பேசிய தமிழக முதல்வர் தமிழக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.