
MegaThathu Dam : 5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டினால், டெல்டா மாவட்டம் பாலைவனமாகும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து, நேற்று அதிமுக தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சென்னையில் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் கூறியதாவது, “5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் முடிவே இறுதியானது. ஆனால் தமிழகத்தில் இந்த நிலை இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சிகள் தான் மேலோங்கி இருக்கும் ” இவ்வாறு கூறினார்.
மேலும், கஜா பாதிப்பு அறிக்கை ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது; மத்திய அரசு அறிக்கையை ஆராய வேண்டும்; அதை தொடர்ந்து நிவாரண நிதியாக மத்திய அரசு எவ்வளவு தருவார்கள் என்று தெரியும்.
மேலும் ‘காவிரியில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கர்நாடகா அரசு மதித்து நடந்த வரலாறு இதுவரை கிடையாது. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்’ .
மேலும் “காவிரி நீரை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன, இதனால் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்” என்று கூறினார்.