சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்க்கார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டீசருக்காக ஆவலுடன் காத்துக்  கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை ஆயுத பூஜை அன்று வெளியிட படக்குழுவினர் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் ஆயுத பூஜையன்று தளபதி ரசிகர்களுக்கு மெகா விருந்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்புறம் என்ன கொண்டாட நீங்க தயாரா ரசிகர்களே?