MDMK Chief Vaiko wishes
MDMK Chief Vaiko wishes

MDMK Chief Vaiko wishes – கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கஜா புயல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “கஜா புயல் நிவாரண பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மேலும் சீரமைப்பு பணியில், அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அதிலும், மின் ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

நாட்டிலேயே மிக சிறந்த நிர்வாகிகள் என்று தமிழக அதிகாரிகள் மீண்டும் நற்பெயரை எடுத்துள்ளனர். மேலும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அதிகாரிகள் இந்த நற்பெயரை எடுத்துள்ளனர்.

மேலும் மாநில அரசு கேட்ட நிவாரண நிதியில் 5 சதவீதத்திற்கும் மேல் மத்திய அரசு நிவாரண நிதியை தராது. நிவாரண பணிகளில் அமைச்சர் உதயகுமார், விஜய பாஸ்கர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் போராட்டம் நடத்துமாறு மக்களை எதிர்கட்சிகள் யாரும் தூண்டிவிடவில்லை” இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here