Master Running Time

மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிகேட் இணையத்தில் லீக்காக விஜய் ரசிகர்கள் இவ்வளவு பெரிய படமா என வாய் பிளந்து வருகின்றனர்.

Master Running Time Certificate : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது படத்தின் சென்சார் சர்டிபிகேட் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அது படத்திற்கு யு ஏ சர்டிபிகேட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத்தின் ரன்னிங் டைம் 178.35 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய படமா என வியந்து போயுள்ளனர்.

மேலும் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் 9 இடங்களில் கத்தரி போட்டு உள்ளனர்.

இதற்கு படக்குழு சம்மதம் தெரிவிக்கவே படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.