Master Movie Trailer Update
Master Movie Trailer Update

மாஸ்டர் ட்ரைலர் கண்டிப்பா இப்படி தான் வரும் என ரசிகர்களுக்கு அதிர்ச்சிகர தகவல் ஒன்றை கூறி உள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.

Master Movie Trailer Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரானா வைரஸ் காரணமாக தள்ளிப் போய் விட்டது.

முகேன் வீடியோவால் வந்த சோதனை.. போலீசில் புகார் அளித்து அபிராமி எடுத்த அதிரடி முடிவு – நடந்ததை நீங்களே பாருங்க

சரி ட்ரெய்லரையாவது ரிலீஸ் பண்ணுங்கப்பா என ரசிகர்கள் கெஞ்சி கேட்டு வரும் நிலையில் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ள இயக்குனர் ரத்னகுமார் அளித்துள்ள பேட்டி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியானால் நிச்சயம் ரிலீஸ் தேதியோடு தான் வெளியாகும் என்று கூறியுள்ளார். அதாவது இப்போதைக்கு மாஸ்டர் டிரைலர் வெளியாகாது என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் எப்படியும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.