Web Ad 2

‘மரகத நாணயம்-2’ படத்தின் அப்டேட்ஸ்..

ஒரு திரைப்படம் வெற்றிபெற்று, ரசிகர்களை ஈர்க்கும் நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. அவ்வகையில் மரகத நாணயம் படம் பற்றிப் பார்ப்போம்..

‘மரகத நாணயம் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் 2-ம் பாகத்தின் பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்தும் முடிவாகி ‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக வீடியோவினை லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கவுள்ள இப்படத்தில் ஆதி, சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ், எடிட்டராக திருமலை ராஜன், கலை இயக்குநராக ராகுல் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்சிஸ் பிலிம் பேக்டரி, குட் ஷோ, டங்கல் டிவி மற்றும் ஆர்.டி.சி மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. விரைவில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதல் பாகம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் 2-ம் பாகம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

maragatha naanayam movie2 movie updates
maragatha naanayam movie2 movie updates