அஜித்துக்கு நடிகை புதிய பட்டம் ஒன்றை கொடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் அஜித் 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் பின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்து பதிவு செய்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

அவருடைய பதிவில் அஜித்திற்கு புதிய பட்ட பெயர் ஒன்றை வைத்துள்ளார். பைக் ஓட்டுவதில் கை தேர்ந்தவரான அஜித்துக்கு அவர் ரைடிங் சூப்பர் ஸ்டார் என பெயர் வைத்துள்ளார். மஞ்சு வாரியார் சூட்டிய இந்த பட்டப்பெயரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.