புதிய மாற்றத்துடன் மீண்டும் குக் வித்து கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் மணிமேகலை.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இறுதி கட்டத்தை நெருங்கி வரும் இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். கோமாளிகளில் ஒருவராக பங்கேற்று வந்த மணிமேகலை திடீரென சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிக் கொண்டார்.

இதையடுத்து அவர் கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இப்படியான நிலையில் தற்போது மணிமேகலை தொகுப்பாளராக மீண்டும் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். சரத்குமார் சிறப்பு விருந்தினராக வருகை தரும் இந்த வார எபிசோடுகளை மணிமேகலை தொகுத்து வழங்குகிறார்.

இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் மணிமேகலையை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். அதே சமயம் அவர் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய் என்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளதாக கூறி வருகின்றனர். ‌‌‌‌