குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணம் என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை கோமாளியாக பங்கேற்று வருகிறார் மணிமேகலை. இவருக்கென மிகுந்த ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் திடீரென இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணம் அவர் கர்ப்பமாக இருப்பது தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பலரும் மணிமேகலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மறுபக்கம் மணிமேகலைக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தான் அவரது வெளியேற்றத்திற்கு காரணம் என கூறுகின்றனர். உண்மை என்ன என்பது மணிமேகலை வெளிப்படையாக தெரிவித்தால் தெரிய வரும்.