Maanaadu

Manaadu Update : மாநாடு கதை கேட்டு தலையே சுத்திடுச்சு என பிரபல முன்னணி எடிட்டர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் சுந்தர் சி படம் முடிந்ததும் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தற்போது பிரபல எடிட்டரான கே.எல் பிரவீன் மாநாடு படத்தின் கதையை கேட்டுள்ளார்.

அது குறித்து ஒரு டீவீட்டையும் டீவீட்டியுள்ளார். அந்த டீவீட்டில் மாநாடு படத்தின் கதையை கேட்டேன்.. எனக்கு தலையே சுத்திடுச்சு.. செம மாஸான கதை.

சிம்பு ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். இந்த டீவீட்டிற்கு வெங்கட் பிரபு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார்.