தங்கலான் படத்தில் இருக்கும் மாளவிகா மோகனின் போஸ்டரை படக்குழு வெளியிடுவது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு மாஸ்டர், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் அடுத்ததாக “தங்கலான்” திரைப்படம் வெளியாக உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி,ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து தங்கலான் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். அப்போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வைரலாகி வருகிறது.