விஜய் பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மாளவிகா மோகனன்.
Malavika Mohanan Reply About Thalapathy Vijay : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவரிடம் ரசிகர்கள் சில கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்துள்ளார்.
விஜய் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் பற்றி சொல்லுங்க என்று கேள்வி கேட்க எனக்கு நல்ல நண்பர் நல்ல ஆலோசகர் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.