நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடித்து அனைவருக்கும் அறிமுகமான இவர் இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து விஜயின் மாஸ்டர், தனுஷின் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த வரிசையில் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது கிளாசிக்கான லுக்கில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.