உத்திரபிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து நடிகை மதுபாலா ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Madhubala About UP Incident : உத்திர பிரதேசத்தில் கடந்த வாரம் 19 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை மதுபாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எந்தவித மேக்கப்பும் இல்லாமல் வியர்வை சொட்டச்சொட்ட ஆவேசத்தோடு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை நடுரோட்டில் தூக்கிலிடுங்கள். அவர்களின் உறுப்பை ஊனமாக்குங்கள் என கூறியுள்ளார்.

Madhu Bala

மேலும் ஆரம்பத்தில் இந்த வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படாத நிலையில் தற்போது திடீரென சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பலரின் ஆதரவை பெற்று வருகிறது. நடிகை குஷ்பு தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து தன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.