நடிகர் மாதவன் தனது ராக்கெட்ரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் மாதவன். இவர் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தனக்கான முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்து அசத்தி வந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த மாதவன் தற்போது “ராக்கெட்ரி: தி நம்பி எக்ஸ்பர்ட்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். அவர் இயக்கியுள்ள இப்படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்தனர்.

அதில் முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த் “ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும்”என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் துன்பங்களை பற்றி பேசி தனது முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனராக மாறியுள்ளார் என்று மாதவனை பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நடிகர் மாதவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் சால்வையை அணிவித்து கௌரவ படுத்தியுள்ளார். அதற்கு அவரிடம் நடிகர் மாதவன் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார் அப்போது அவர்களோடு இந்த சந்திப்பில் நம்பி நாராயணன் அவர்களும் உடன் இருந்துள்ளார். தற்போது அந்த நெகிழ்ச்சியான வீடியோ பதிவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.