தமிழ் திரையுலகில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி நடிகைகள் மீ டூ என்று ஹேஸ்டேக்கில் பதிவு செய்து வருகின்றனர்.

சின்மயி வைரமுத்து, ராதா ரவி, டான்ஸ் மாஸ்டர் என பல பிரபலங்கள் மீது குற்றசாட்டுகளை வைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சின்மயிக்கு 8 வருடங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு சம்பவம் நடந்த போது அவருக்கு ஆதரவாக நானும் என் மனைவியும் இருக்கிறோம் என வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி அவர்கள் பதிவு செய்து இருந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

அந்த டீவீட்டில் மதன் கார்க்கி உன்னுடைய பாராட்டுகிறேன். சரியான வேளையில் இறங்கியுள்ளீர்கள் என குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்.

இதனால் தற்போது சின்மயி முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மதன் கார்க்கியின் ஆதரவு கிடைக்குமா? அவருடைய முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.