பார்வையற்றவர்களுக்காக அட்டகாசமான பிரத்யேகமான டீசரை உருவாக்கியுள்ளது மாயோன் படக்குழு.

Maayon Movie Teaser : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரது நடிப்பில் டபுள் மீனிங் ஃப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள திரைப்படம் தான் மாயோன். இந்த படத்தினை என் கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் டத்தோ ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரிஷ் பேரடி, அராஷ் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

பார்வையற்றவர்களுக்காக அட்டகாசமான பிரத்தியேக டீசரை உருவாக்கிய மாயோன் படக்குழு - மிரள வைக்கும் வீடியோ.!!

இசை ஞானி இளையராஜா இசையமைக்க ராம்பிரசாத் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. படத்தின் டீசர் மிரட்டலாக இருப்பதாக டீசரை பார்த்தவர்கள் கமெண்ட் செய்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மாயோன் படக்குழு புது முயற்சியாக பார்வையற்றவர்களுக்காக பின்னணி குரலுடன் பிரத்தியேக டீஸர் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

அதேசமயம் மாயோன் படக்குழுவினரின் புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maayon (Tamil) - Official Teaser | Sibi Sathyaraj | Tanya Ravichandran | Radha Ravi | Ilaiyaraaja
Maayon - Official Teaser (with Tamil Audio Description) | Sibi Sathyaraj | Tanya Ravichandran