சிலை கடத்தலை தடுக்கும் கதையை மையமாகக் கொண்டு இளையராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாயோன்.

Maayon Movie Story Details : மிகுந்த பொருட்செலவில் தயாராகி உள்ள மாயோன் படத்தில் சிபி ராஜ் கதாநாயகனாகவும் அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். சமீப காலமாக கோயில் சிலைகள், புரதான சின்னங்கள் வெளிநாட்டவரின் சதியால் களவாடப்படுகிறது. அந்த புரதான சிலைகளையும், அதை பற்றிய ரகசியங்களையும் மிக அழகாக சித்தரிக்கும் படம் மாயோன். இப்படத்திற்காக புதுக்கோட்டை அருகில் மாய மலையில், பாதாள அறை, புரதான சிலைகள், புரதான சின்னங்கள் போன்றவை ஆர்ட் டைரக்டரால் வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது : போதைப் பொருள் தடுப்பு அதிகாரி மனைவி புகார்

பத்மநாபபுரம் கோட்டை, மகாபலி சிற்பங்கள், செஞ்சிக்கோட்டை, கீழடி போன்ற கோட்டைகள் அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்களால் கட்டிய ஒவ்வொன்றிலும் பல அதிசயங்களும், மர்மங்களும் அதிகளவில் உள்ளன.இதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் புதையல் தேடி வருபவர்கள் சந்திக்கும் அதிசயமும், அதிர்ச்சியும் சுவாராஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், என இப்படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைக்கும். புதிய முயற்சியுடன் பல சுவாரஸ்யங்களும் இப்படத்தில் காத்திருக்கின்றன.

எங்க அப்பா அம்மா தான் சொல்லுவாங்க! – Actress Sanchita Shetty Speech | HD

இப்படத்தில் ராதா ரவி, முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா மிக சிரத்தை எடுத்து அதிக நாட்கள் பின்னணி இசையமைத்து இப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷை வைத்து வாட்ச்மேன், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சைக்கோ என புதிய கோணத்தில் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து Double meaning production சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.. N.கிஷோர் இப்படத்தை இயக்கியுள்ளார்.