
மாவீரன் கொடுத்த சக்சஸால் மகிழ்ச்சி பொங்கும் லுக்கில் சிவகார்த்திகேயன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டு உள்ள இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாவீரன்.
மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அதிதி சங்கர், மிஷ்கின், யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. 11 நாட்களில் 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படி மாவீரன் படம் கொடுத்த மிகப்பெரிய சக்சஸ் காரணமாக சந்தோஷத்தில் திளைக்கும் லுக்கில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.