மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் ஷங்கர் இசை அமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து இப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு ஆரம்பித்துள்ளது.

மேலும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஜூலை 2ம் தேதியான இன்று மாலை 6 மணி அளவில் தொடங்கப்பட்ட சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தபடி இப்படத்தின் ட்ரெய்லர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. அதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்து வைரலாக்கி வருகின்றனர்.