மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் ஷங்கர் இசை அமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து இப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு ஆரம்பித்துள்ளது.

மேலும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஜூலை 2ம் தேதியான நேற்று மாலை 6 மணி அளவில் சாய் ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது படக்குழு அறிவித்திருந்தபடி மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வரும் இந்த ட்ரெய்லர் இதுவரை 3 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருவதாக படக்குழு ஸ்பெஷல் வீடியோவுடன் அதிகாரவூர்வமாக அறிவித்துள்ளது.