மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது .

சின்னத்திரை மூலம் தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் மாஸ் காட்டி வரும் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் ஷங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ஜூலை 2 ஆம் தேதியான இன்று வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் புது அப்டேட்டாக இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு சன் டிவி யூ டியூப் சேனலில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/redgiantmoveis/status/1675112887248113664?t=jqMgvbMPfi_3c74ShvYt_g&s=19