மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி, இப்படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.