மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது தொடர்ந்து இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை படக்குழு அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயனின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது. இந்த தகவலால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போஸ்டருக்கு லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காகி வருகின்றனர்.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1649771217694629890?t=lKn7OXmQrgfA9Pp0dURAMQ&s=19