மாவீரன் திரைப்படத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் ஷங்கர் இசை அமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து இப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு ஆரம்பித்துள்ளது.

மேலும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வருகிற ஜூலை 2ம் தேதி சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக படகுழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூலை 2 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில் நீருக்கு அடியில் ஆக்ரோஷமாக கத்தும் சிவகார்த்திகேயன் வீடியோ இடம் பெற்றுள்ளது. அது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.