மாவீரன் திரைப்படத்தின் அப்டேட்டாக படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Maaveeran movie latest update viral:

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மண்டேலா திரைப்படத்தை இயக்கி பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளத்துடன் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்களுக்காக ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இது இப்படத்தின் முதல் பாடலுக்கான அறிவிப்பாக இருக்கும் என்று கமெண்ட் செய்து அப்போஸ்டரை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.