மாவீரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதை காலத்துடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீட்டு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 17ஆம் தேதியான நாளை வெளியாகவுள்ளது.