Maari2 Vs Kanaa

Maari2 Vs Kanaa : மாரி 2, அடங்கமறு, கனா ஆகிய படங்களில் கடந்த வசூல் நிலவரங்கள் என்ன? எந்த படம் அதிக வசூல் என்ற நிலவரம் தற்போது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு முதல் நான்கு படங்களாவது ரிலீசாகி விடும். ஆனால் கடந்த டிசம்பர் 21-ம் தேதி மட்டும் ஒரே நாளில் 6 படங்கள் ரிலீசாகி இருந்தன.

மாரி 2, அடங்க மறு, சீதக்காதி, கனா, KGF, சிலுக்குவார்பட்டி சிங்கம் என 6 படங்கள் ரிலீசாகின. இவை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

தற்போது இவைகளில் மாரி 2, அடங்க மறு, கனா ஆகிய படங்களின் கடந்த வார வசூல் என்ன என்பது குறித்த தகவல்கள் மட்டும் கிடைத்துள்ளன.

அவை இதோ

மாரி 2- ரூ. 2.11 கோடி
அடங்க மறு- ரூ. 2.05 கோடி
கனா- ரூ. 98 லட்சம்

இதில் மாரி 2 மற்றும் அடங்க மறு ஆகிய படங்கள் கமர்ஷியலாக வரவேற்பை பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.

விவாசாயத்தையும் பெண்கள் கிரிக்கெட்டையும் ஒரே படத்தில் மிகவும் எதார்த்தமாக பேசிய கனா படம் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

கனா படத்திற்கு தற்போது கிடைத்த தியேட்டர்களை விட அதிகமான திரையரங்குகள் கிடைத்து இருந்தால் வசூலில் நிச்சயம் முதலிடத்தை பிடித்திருக்கும் என்பது கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.