Maari 2 Sensor

Maari 2 Sensor : மாரி 2 படத்தை பற்றிய அசத்தலான அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார் தனுஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தனுஷ். நடிகர் என்பது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களில் வலம் வருகிறார்.

இவர் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் அளித்துள்ளது.

இதனை நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.