Maanaadu

Maanadu Update : சிம்புவின் மாநாடு படத்தில் மெகா ஸ்டார் இணைந்திருப்பது இந்த கூட்டணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த கூட்டணியில் தற்போது புதியதாக மெகா ஸ்டார் ஒருவர் இணைந்துள்ளார்.

ஆம், இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க உள்ளார். மங்காத்தா கூட்டணியை போல இது உருவாகி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும் அர்ஜுனுக்கு இந்த படத்திலும் மாஸான வில்லன் வேடம் தான் என பேசப்பட்டு வருகிறது. அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.

சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படம் தாறு மாறான மாஸாக கெத்தாக உருவாக உள்ளது.

இந்த படம் சிம்பு ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட்டாக இருக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.