மாநாடு படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியான 14 மணி நேரத்தில் பெரும் சாதனை படைத்துள்ளது.

Maanadu Trailer 2 Record in YouTube : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சிம்பு. பல்வேறு தடைகளைத் தாண்டி இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க படத்தில் எஸ் ஜே சூர்யா, மனோஜ், எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதோடு இரண்டாவது டிரைலரும் இணையத்தில் வெளியானது.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar

மாநாடு படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியான 14 மணிநேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூபில் பெரும் சாதனை படைத்து இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இவருடைய இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.