சிம்பு ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக மாநாடு திரைப்படம் வெளியாகி உள்ளது.

Maanaadu Movie Review : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஒரு மாநாடு கூட்டத்தில் முதலமைச்சர் கொள்வதற்கான சதி நடக்கிறது. இந்த சதி வழக்கில் எதிர்பாராத விதமாக சிம்பு இழுத்து வரப்படுகிறார். பின்னர் அவர் இதனை எப்படி சமாளிக்கிறார் அடுத்து என்ன நடக்கிறது? என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

நடிகர் சிம்பு வழக்கம்போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

சிம்புவை போலவே கச்சிதமான நடிப்பால் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

அவர் மட்டுமல்லாமல் நாயகியாக நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், ‌‌ மற்றும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள எஸ் ஏ சந்திரசேகர் என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

இசை :

யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ‌‌ பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.

ஒளிப்பதிவு :

ரிச்சர்ட் எம் நாதன் படத்தினை அழகாக படமாக்கி காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

பிரவீன் கே எல் அவர்களின் எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்கம் :

தன்னுடைய இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களை காட்டிலும் இந்த படத்தில் அதிக கவனத்தைச் செலுத்தி அதற்கு ஏற்றார்போல நடிகர்களிடம் வேலை வாங்கி பக்கா ஆக்ஷன் என்டர்டெயினர் திரைப்படமாக மாநாடு படத்தை இயக்கியுள்ளார்.

Maanaadu Public Review | Maanaadu Public Opinion

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை சிறியது என்றாலும் திரைக்கதை மூலம் படத்தின் விறுவிறுப்பை கூட்டியது சிறப்பு.

2. சிம்பு, எஸ் ஜே சூர்யா என படத்தில் உள்ள நடிகர் நடிகைகளின் நடிப்பு.

3. வெங்கட் பிரபுவின் இயக்கம்

4. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தின் குறை என சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

REVIEW OVERVIEW
மாநாடு விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
maanaadu-movie-reviewமொத்தத்தில் மாநாடு சிம்பு ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.