மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். இதில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் பிறகு இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.