மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். இதில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் பிறகு இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஜூன் 16ஆம் தேதியான நாளை வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி இருக்கிறது.