மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் மீண்டும் ஒருமுறை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல விநியோகிஸ்தர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வளம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். முன்னணி நடிகராகவும் கலக்கி வரும் இவர் தற்போது அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அதனால் படங்களில் நடிப்பதை தவிர்க்க இருக்கும் இவர் தனது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

பகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், திரை பிரபலங்கள் மதியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படத்தின் வெற்றியை ஏற்கனவே ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து படக்குழுவினர் செலிபிரேட் செய்திருந்ததை தொடர்ந்து மாமன்னன்’ பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு உதயநிதி அவர்கள் மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் வரவேற்பை மீண்டும் ஒருமுறை படக்குழுவினர் கேக் வெட்டி செலிப்ரேட் செய்துள்ளனர். அதில் உதயநிதி ஸ்டாலின், கிர்திகா உதயநிதி, கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.